News
{
}
BBC Tamil
Language: Tamil
-
11/24/2026 12:54:58 PM +00:00திருப்பரங்குன்றம் கோவில் மலை மீதுள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் இந்தாண்டும் வழக்கம் போல் கார்த்திகை தீப நாளான இன்று தீபம் ஏற்றப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் வழக்கம்போல் ஏற்றப்படும் உச்சி பிள்ளையார் கோவிலில் உள்ள தீப மண்டபத்தில் கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அரோகரா பக்தி முழக்கம் முழங்க சாமி தரிசனம் செய்தனர்
-
11/24/2026 2:28:55 PM +00:00ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் தொடரில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். தோஹாவில் நடைபெற்ற போட்டியில் இந்தியா ஏ அணிக்காக களமிறங்கிய அவர், 53 பந்துகளில் 204 ரன்கள் குவித்தார். இதில் 7 பவுண்டரிகளும் 28 சிக்ஸர்களும் அடக்கம். இதன்மூலம், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக சதம் மற்றும் இரட்டை சதம் உள்ளிட்ட முந்தையை சாதனைகளை அவர் முறியடித்துள்ளார்.
-
11/24/2026 11:43:54 AM +00:00திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு மதுரையில் அமல்படுத்தப்பட்டுள்ள தடை உத்தரவுகளை மறுபரிசீலனை செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை (நவம்பர் 24) அறிவுறுத்தியுள்ளது. உயர் நீதிமன்றத்தில் என்ன நடக்கிறது?
-
11/24/2026 1:15:41 PM +00:00பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் கள்ளக்குறிச்சி த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது.
-
11/24/2026 1:06:18 PM +00:00இந்தியாவில் தங்கத்தில் ரீனியம் என்ற உலோகம் கலக்கப்படுவதாகவும், அதனால் வாடிக்கையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாகவும் வெளியான தகவலைத் தொடர்ந்து, தங்க கலப்படம் குறித்த விவாதங்கள் எழுந்துள்ளது.
-
11/24/2026 12:13:25 PM +00:00திருப்பரங்குன்றம் மலையில் தர்காவுக்கு அருகே உள்ள சர்ச்சைக்குரிய கல் தூண், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நிலப்பரப்பை அளப்பதற்காக அமைக்கப்பட்ட முக்கோணவியல் நில அளவைத் தூண் (GTS) எனத் தமிழ்நாடு அரசின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. நில அளவை மற்றும் தொல்லியல் துறைகள் இணைந்து தயாரித்த 2026 அறிக்கையில், தமிழகத்தில் 800-க்கும் மேற்பட்ட GTS நிலையங்கள் கண்டறியப்பட்டதாகவும், அவற்றில் 484 நேரில் ஆய்வு செய்து ஆவணப்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆவணப்படுத்தப்பட்ட 63 கல் தூண்களில் சில வழிபாட்டிலும், சில எண்ணெய் ஊற்றும் வழக்கத்திலும் உள்ளன. 1802-ல் தொடங்கிய இந்தியாவின் பெரும் முக்கோணவியல் நில அளவைத் திட்டத்தின் வரலாற்றையும் அறிக்கை விளக்குகிறது.
-
11/24/2026 3:00:23 AM +00:00கட்டாய ஹிஜாப் அணியாமல் இசை நிகழ்ச்சியில் பாடிய இரானியப் பாடகி பரஸ்தூ அஹ்மதி மற்றும் குழுவினர் 4 பேருக்கு கோம் நகரில் தலா 74 சவுக்கடி தண்டனை நிறைவேற்றப்பட்டது.
-
11/24/2026 9:53:28 AM +00:00துருக்கியில் நடைபெற்ற COP31(சிஓபி) காலநிலை உச்சிமாநாடு, காலநிலை மாற்றத்தின் பாதிப்புகள் முன்னெப்போதையும் விடத் தெளிவாக வெளிப்பட்டுள்ள ஒரு சூழலில் நடைபெற்றது.
-
11/24/2026 1:21:42 AM +00:00நர்மதை ஆற்றுப் படுகையில் 7 முதல் 9 வரிசைகளில் பற்களைக் கொண்ட பிரம்மாண்டமான தாடை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்தப் புதைபடிவம் ஆராய்ச்சியாளர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. தாடையின் அளவு, பற்களின் அமைப்பு மற்றும் அவற்றின் எண்ணிக்கை ஆகியவை, இது எந்த வகையான பழங்கால உயிரினத்துக்குச் சொந்தமானது என்பதை அறிய உதவும் முக்கியத் தடயங்களாகக் கருதப்படுகின்றன. புதைபடிவத்தின் அமைப்பை ஆய்வு செய்து வரும் ஆராய்ச்சியாளர்கள், அதன் தனித்துவமான பல் வரிசைகள் குறித்து கவனம் செலுத்தியுள்ளனர். பொதுவாக உயிரினங்களின் பற்களின் அமைப்பு, அவற்றின் உணவுப் பழக்கம், வாழ்விடம் மற்றும் பரிணாம வளர்ச்சி குறித்த தகவல்களை வழங்கும். இந்தத் தாடை எந்த உயிரினத்துக்குச் சொந்தமானது? அதன் வயது என்ன? நர்மதைப் பகுதியில் இதுபோன்ற புதைபடிவங்கள் கிடைப்பது எதைக் காட்டுகிறது? ஆய்வாளர்களின் கண்டுபிடிப்புகள் என்ன சொல்கின்றன? என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
-
11/24/2026 2:22:40 AM +00:00பல்வேறு வகையான முகக்கவசங்கள் மற்றும் காற்று சுத்திகரிப்பான்களுக்கான சந்தைத் தேவை அதிகரித்து வருகிறது. அதேசமயம், வீட்டில் வளர்க்கக்கூடிய சில வகைச் செடிகளின் முக்கியத்துவம் குறித்தும் நிபுணர்கள் அடிக்கடி பேசுகின்றனர். ஆனால், வீட்டுக்குள் காற்றைத் தூய்மையாக வைத்திருக்க இந்தச் செடிகள் உண்மையிலேயே உதவுகின்றனவா? மேலும், வீட்டுக்குள் காற்றைத் தூய்மையாக வைத்திருப்பதில் காற்று சுத்திகரிப்பான்கள் எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கின்றன?
-
11/23/2026 4:24:22 PM +00:00ரஷ்யாவுக்குத் திரும்பிக்கொண்டிருந்த ஒரு போர்க்கப்பல், எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை நிரப்புவதற்காக நின்றிருந்தபோது மூழ்கிவிட்டதாக லிபியாவின் கிழக்கு அரசாங்கம் தெரிவித்துள்ளது
-
11/23/2026 11:41:03 AM +00:00கடந்த ஐந்து ஆண்டுகளில் தங்களது போதை நீக்க மற்றும் மறுவாழ்வு மையத்திற்கு வரும் பரிந்துரைகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளதாக போதைப்பொருள் தொண்டு நிறுவனமான கைலடோஸ்கோப் கூறுகிறது.
-
11/20/2026 1:19:16 PM +00:00பியூ ஆய்வின்படி, 2070ஆம் ஆண்டிலும் இந்தியாவில் இந்துக்களே பெரும்பான்மையாக இருப்பார்கள்; அதேவேளையில், முஸ்லிம்களின் மக்கள்தொகைப் பங்கு 15 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
-
11/21/2026 10:26:05 AM +00:006 வயதான ஐஸா க்யூட்டிஸ் லாக்ஸா எனப்படும் அரிதான மரபணு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
-
11/13/2026 10:50:27 AM +00:00தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் விருப்பம் என்ன? தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்குத் திரும்பியவர்களின் தற்போதைய நிலை என்ன? என்பது போன்ற விஷயங்களைத் தெரிந்துகொள்ள பிபிசி தமிழ் தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் கள ஆய்வு மேற்கொண்டது.
-
11/6/2026 4:23:03 PM +00:00காசிக்கும் தமிழர்களுக்கும் இடையேயான தொடர்பை அறிந்துகொள்ள அந்த நகரத்துக்கு பயணப்பட்டேன். அந்தப் பயண அனுபவமே இந்தக் கட்டுரை.
-
11/6/2026 2:11:34 AM +00:00குஜராத்தின் சாசன் கிர் பகுதியில் பெண் சிங்கம் ஒன்று தான் வேட்டையாடிய மான் குட்டியைச் சாப்பிடாமல் அதைப் பிற சிங்கங்களிடம் இருந்தும்கூட காப்பாற்றியுள்ளது. ஏன்?
-
11/7/2026 11:30:48 AM +00:00சில்லறைக்காக ஏற்பட்ட தகராறில் பெண் பயணி ஒருவர் தாக்கியதால் பேருந்தில் இருந்து கீழே விழுந்த நடத்துநர் பிரவாலிகா, நவம்பர் 3ஆம் தேதி உயிரிழந்ததாக அவரது தாயார் விஜயலட்சுமி பிபிசியிடம் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது?
-
11/3/2026 12:34:03 PM +00:00ஒவ்வோர் ஆண்டும் வங்கக் கடலில் உருவாகும் பெரும்பாலான புயல்கள் இந்த இரண்டு மாதங்களில்தான் உருவாகின்றன என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது. அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஏன் அதிக எண்ணிக்கையிலான புயல்கள் உருவாகின்றன என்பதைக் கண்டறிய, இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் இன்காய்ஸ் (இந்திய தேசிய கடல் தகவல் சேவைகள் மையம்) ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த விஞ்ஞானிகளிடம் பிபிசி பேசியது.
-
11/7/2026 4:23:52 PM +00:00இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், 26 வயதான ஐசக் வால்டெஸ் தனது வீட்டிற்கு அருகிலுள்ள நூலகத்தில் புத்தகங்களைப் பார்த்துக்கொண்டிருந்தபோது அவருக்கு வலிப்பு ஏற்பட்டது. இதனால் அவரது உடல் கடுமையாகக் குலுங்கியதுடன், தலை தரையில் மோதியது.
-
11/2/2026 9:21:49 AM +00:00இலங்கைக்குத் திரும்புவதற்கான போக்குவரத்து விசா கிடைக்காமல், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவின் விசா மறுப்புகளால் பசிபிக் பெருங்கடலில் உள்ள குக் தீவில் சுமார் மூன்று ஆண்டுகளாகத் தவித்து வருகிறார் 50 வயது இலங்கைப் பெண் ருச்சிரா ரணசிங்கே
-
இந்தியாவில் ஒரு பேரரசை உருவாக்க அடிகோலிய ராபர்ட் கிளைவ் மீது இங்கிலாந்தில் மக்களிடையே அதிருப்தி ஏன்?11/3/2026 10:39:51 AM +00:00சதி, துரோகம், பிளாசிப் போர் வழியாக கிளைவ் இந்தியாவில் ஆங்கிலேய ஆதிக்கத்தின் அடித்தளமிட்டது குறித்து பேசுகிறது இந்தக் கட்டுரை.
-
11/5/2026 3:15:25 AM +00:00பதப்படுத்தப்படாத பால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது முதல் பால் பொருள்களால் ஏற்படும் ஒவ்வாமையைத் தடுப்பது, செரிமானத்தை மேம்படுத்துவது வரை அனைத்தையும் செய்ய முடியுமா?
-
11/7/2026 11:39:52 AM +00:00இந்தியாவில் திரைப்படத் துறை என்னென்ன வழிகளில் எல்லாம் வருவாய் ஈட்டுகிறது? ஒரு திரைப்ப்படத்தைத் தயாரிப்பதில் தயாரிப்பாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?